மே தினத்தினை முன்னிட்டு மூடப்படும் கல்முனை பொதுச்சந்தை

Ampara May Day Kalmunai
By Farook Sihan Apr 30, 2026 02:11 AM GMT

 மே தினத்தினை முன்னிட்டு கல்முனை பொதுச்சந்தை மூடப்படும் என அதன் செயலாளர் அறிவித்துள்ளார்.

கல்முனை பொதுச்சந்தை வர்த்தகர்களுக்கும் மற்றும் நுகர்வோர்களுக்குமான பணிவான வேண்டுகோள் என்ற பெயரில் துண்டுப்பிரசுரம் ஒன்றினை வெளியிட்டு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தல் தொடர்பில் தெளிவு படுத்திய கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தக சங்க செயலாளர் ஏ.எல். கபீர், "எமது பொதுச் சந்தை வர்த்தக சங்கத்தினருக்கும் பொதுச் சந்தையில் உள்ள தொழிலாளர் சங்கங்களுக்கும் இடையிலான சினேகபூர்வ கலந்துரையாடல் வர்த்த சங்க காரியாலத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் எதிர்வருகின்ற மே தின ஓய்வு சம்பந்தமாக தொழிலாளர் சங்கத்தினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்க்கப்பட்டது.

அத்துடன் கல்முனை மாநகர ஆணையாளரின் உத்தரவிற்கு அமைவாக எதிர்வரும் மே 1ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) பொதுச்சந்தையை முற்று முழுதாக மூடி அத்தினத்தில் தொழிலாளர்களுக்கு ஓய்வு கொடுப்பது என்பதாக தீர்மானம் எட்டப்பட்டது.

இத்தீர்மானத்திற்கு அமைவாக அத்தினத்தில் எமது பொதுச் சந்தையின் வளர்ச்சிக்கும் அன்றாட இயங்குதலுக்கும் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில், அனைத்து தொழிலாளர்களுக்கும் கட்டாய விடுமுறை வழங்கப்பட வேண்டும்.

அன்றைய தினம் தொழிலாளர்களின் ஓய்வினை உறுதிப்படுத்தும் பொருட்டு, சந்தையின் வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் ஏனைய செயற்பாடுகள் முழுமையாக இடைநிறுத்தப்படும்.

ஆகவே அனைத்து வர்த்தக நிலைய உரிமையாளர்களும் தங்களது தொழிலாளர்களுக்கு இந்த விடுமுறையினை வழங்கி, சர்வதேச தொழிலாளர் தினத்தை சிறப்பிக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்" என குறிப்பிட்டுள்ளார். 

GalleryGalleryGallery