கல்முனை வடக்கு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் புதிய தலைவர் நியமனம்!
Sri Lanka
Kalmunai
By Farook Sihan
கல்முனை வடக்கு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் புதிய தலைவராக ஊடகவியலாளரும் வங்கியாளருமான இராசையா ஸ்ரீவேல்ராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை (29.04.2023) அன்று இடம்பெற்ற புதிய இயக்குநர் சபை தெரிவின்போதே இவர் ஏகமானதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மேலும் இதன் உப தவைராக இராஜகோபால் நடராஜா தெரிவு செய்யப்பட்டதுடன் இவர்களைத் தவிர ஏழு பேர் கொண்ட இயக்குநர் சபை உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் தலைவர் சுப்பிரமணியம் அரசரெத்தினம், மார்க்கண்டு லோகராஜா , கிருஷ்ணபிள்ளை நாகராஜா, அன்புமணி ராஜினி, நிபோஜனா பற்மராஜா, தவராஜா வினிதா, குணரெட்னம் கேதீஸ், ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர் .
முக்கிய செய்திகளை உங்களது கை தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள எம்முடன் இணையுங்கள் Join Now |