கல்முனை பள்ளிவாசல்களின் உதவியை கோரும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி!
வீதி விபத்துக்களை தடுப்பதற்காக கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பள்ளிவாசல்களின் உதவியை கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.ஏ.எல்.லசந்த களுஆராச்சி கேட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிக்குட்பட்ட பிரதான வீதிகளிலும் மற்றும் உள் வீதிகளிலிலும் வீதி விபத்துக்கள் மூலம் மரணங்கள் மற்றும் படுகாயங்களும் அண்மையில் அதிகளவாக ஏற்பட்டு வருக்கின்றன.
அத்துடன், இவ் வீதி விபத்துக்களினால் மரணம் ஏற்படுவதுடன் பாரிய காயங்கள் ஏற்பட்டு ஊனமுற்றவர்களாக பலர் காணப்படுகின்றனர்.
இதனால் அவர்களின் குடும்பங்கள் பாரிய பின்னடைவை ஏற்படுத்துகின்றது. அத்துடன் ஏனைய பொதுமக்களுக்கும் சிரமங்கள் ஏற்படுகின்றன.
கல்முனை பள்ளிவாசல்களின் ஒத்துழைப்பு
எனவே இவ் வீதி விபத்துக்களில் இருந்து பாதுகாத்து கொள்வதற்காக சமூக உணர்வுடன் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பள்ளிவாசல்களின் ஒத்துழைப்பினை கேட்டுக் கொள்கின்றேன்.
எனவே தாங்கள் வீதி விபத்துக்களில் இருந்து மீளுவதற்காக வாகனங்களை நல்ல முறையில் பராமரிப்பதோடு அவ்வாகனங்களுக்குரிய ஆவணங்களை உரிய காலங்களில் பெற்றுக் கொண்டு வீதி விதி முறைகளை முறையாக பேணுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
வீதி விதிகளை மீறினால் எடுக்கப்படும் கடும் சட்ட நடவடிக்கை
மேலும், சாரதி என்ற வகையில் பொறுமையை பேணுமாறும் மேலும் தங்களது பிள்ளைகளுக்கு உரிய சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொடுப்பதுடன் மோட்டார் சைக்கிளை இளம் சிறார்களுக்கு கொடுப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் மேலும் கேட்டுள்ளார்.
அத்துடன் உள் வீதியில் மோட்டார் சைக்கிளை செலுத்தும் போது கட்டாயமாக பிரயாணம் செய்பவர்கள் பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்து செல்லுமாறு கேட்டுக் கொள்வதுடன் தவறும் பட்சத்தில் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
You May Like This Video...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |