கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின் வருடாந்த ஒளி விழா
கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின் வருடாந்த ஒளி விழா கல்லூரி அதிபர் அருட்சகோதரர் அதிபர் எஸ். ஈ. றெஜினோல்ட் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இந்த வருடாந்த ஒளி நிகழ்வானது நேற்று(22) பற்றிமா பாடசாலையில் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
ஆரம்ப நிகழ்வாக, கார்மேல் பற்றிமா கொன்மேன்ற் பெண்கள் கல்லூரியில் இருந்து பாரிய கண்கவர் கலாசார அம்சங்கள் அடங்கிய ஊர்வலம் ஆரம்பமாகியது.
கலாசார அரங்கேற்றம்
தொடர்ந்தும் கண் கவர் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் அருட்தந்தை ஏ. அகஸ்டின் நவரெத்தினம் அடிகளார் கலந்து சிறப்பித்ததுடன் பல மத பெரியார்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.
குறித்த பண்பாட்டு பாரம்பரியம் மிக்க பெரும் கலைத்துவ ஊர்வலம் நேரடியாக பாத்திமா கல்லூரியை அடைந்த பொழுது அங்கு பாரம்பரிய சம்பிரதாய முறைப்படி கலை நிகழ்ச்சிகளும் மேடை ஏறின.
அத்துடன் பாடசாலையின் மூன்றாம் தவணை இறுதி நாள் என்ற காரணத்தினால் நிகழ்ச்சிகளில் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர். அவை அரங்கத்தை மேலும் கலைகட்டச் செய்தன.
இதற்கிடையில், கல்லூரியின் 125ஆவது ஆண்டினை சிறப்பிக்கும் வகையில் வாணி விழா மற்றும் மீலாதுன் நபி விழா மிகச் சிறப்பாகவும், பிரமாண்டமாகவும் அண்மையில் நடைபெற்றதை பலரும் பாராட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |