குகதாசன் எம்.பிக்கும் கரி ஆனந்தசங்கரிக்குமிடையில் விசேட கலந்துரையாடல்
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் (K. S. Kugathasan) கனேடிய நடுவண் அரசின் பழங்குடிமக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்(Minister of Crown - Indigenous Relations) கரி ஆனந்தசங்கரியை(Gary Anandasangaree) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது இலங்கைத் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறுபட்ட சிக்கல்கள் பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ,குறித்த கலந்துரையாடலானது ஒரு மணிநேரம் வரை நீடித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் நெருக்கடிகள்
இதேவேளை, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் (S.Shritharan) கனடா (Canada) சென்றுள்ளார்.
பொறுப்புக்கூறல், இந்து-பசுபிக் பிராந்தியத்தின் சமகால அரசியல் சூழல்கள் மற்றும் தமிழ் மக்களின் நெருக்கடிகள் உள்ளிட்ட பலவிடயங்கள் தொடர்பாக கனேடிய பிரதியமைச்சருடன் அவர் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இந்தக் கலந்துரையடலின் போது இலங்கைத் தமிழரசுக்கட்சியின் திருகோணமலை (Trincomalee) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனும் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |