மக்கள் வேலைநிறுத்தப் போராட்டங்களை கைவிட்டுமாறு ஜீவன் அறிவிப்பு

Sri Lanka Upcountry People Sri Lankan Peoples Jeevan Thondaman
By Madheeha_Naz Jul 26, 2024 01:39 AM GMT

பெருந்தோட்ட மக்களுக்கு ஜீவன் விடுத்துள்ள அறிவிப்பு

போராட்டங்களை கைவிட்டு இன்று முதல்(26) தொழிலுக்கு செல்லுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வேலைநிறுத்த போராட்டம் காரணமாக தங்களுடைய தொழில் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் அனைவரும் போராட்டங்களை கைவிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மக்கள் வேலைநிறுத்தப் போராட்டங்களை கைவிட்டுமாறு ஜீவன் அறிவிப்பு | Jeevan Thondaman Arrest Up Country People Protest

போராட்டம்

நுவரெலியா - பீட்ரூ தோட்ட தேயிலை தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்த சம்பவம் தொடர்பான வழக்கில் அமைச்சர் ஜீவன் உள்ளிட்ட தரப்பினர் முன்னிலையாகாத நிலையில் அவரை கைது செய்யுமாறு நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக கேள்வியுற்று அனைத்து பொது மக்கள் குறிப்பிட்ட பெருந்தோட்ட நிறுவனத்திற்கு எதிராக தொடர்ச்சியாக அடையாள வேலை நிறுத்தத்தினை மேற்கொண்டு வருகின்றார்கள்.

இந்நிலையில் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிடுமாறு தெரிவித்துள்ளார்.