யாழ். இந்தியத் துணைத் தூதுவரின் பதவிக்காலம் நிறைவு

Jaffna Sri Lanka India Northern Province of Sri Lanka
By Aanadhi Feb 23, 2024 09:09 AM GMT

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரின் பதவிக்காலம் எதிர்வரும் 25ஆம் திகதியுடன் நிறைவு பெறவுள்ளது.

அதனையடுத்து புதுடெல்லியில் உள்ள இந்திய வெளியுறவு அமைச்சுக்கு மாற்றலாகிச் செல்ல இருப்பதாக தெரிய வந்துள்ளது.

தமிழ்நாடு

கடந்த 2021ஆம் ஆண்டின் ஜூலை மாத இறுதியில் யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத்தூதராக இந்திய வெளியுறவு அமைச்சினால் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் நியமிக்கப்பட்டிருந்தார்.

யாழ். இந்தியத் துணைத் தூதுவரின் பதவிக்காலம் நிறைவு | Jaffna Completion Tenure Indian Deputy Ambassador

தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர், யாழ்.துணைத் தூதராக பொறுப்பேற்க முன்னர் கண்டியிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தில் பணியாற்றியிருந்தார்.

இந்நிலையில் தற்போது இலங்கையில் தனது பணிகளை முடித்துக் கொண்டு மீண்டும் நாடு திரும்பவுள்ளார்.