இஸ்ரேல் நடத்திய தாக்குதல்! தெற்கு லெபனானில் பலியான மக்கள்
Israel
Lebanon
World
By Fathima
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் தெற்கு லெபனானில் உள்ள 2 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர்நிறுத்த கண்காணிப்பு குழு கூட்டத்திற்கு ஒரு நாள் முன் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
தாக்குதல்
இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்கள் ஹெஸ்பொல்லா உறுப்பினர்கள் என இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது.

இந்த நிலையில், இஸ்ரேல் தாக்குதல்கள் அமைதிக்கான முயற்சிகளை தகர்க்கும் செயல் என லெபனான் அதிபர் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.
இதேவேளை, 2024 நவம்பர் போர்நிறுத்தத்திற்குப் பிறகு, லெபனானில் இஸ்ரேலிய தாக்குதல்களில் 300-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாகவும் உயிரிழந்தவர்களில் குறைந்தது 127 பேர் பொதுமக்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.