காசா பாடசாலை மீது இஸ்ரேல் கொடூர தாக்குதல்:பலர் உயிரிழப்பு
தெற்கு காசா (Gaza) பகுதியில் உள்ள பாடசாலையின் மீது இஸ்ரேல் (Israel) இராணுவம் நடாத்திய தாக்குதலில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த தாக்குதலானது தெற்கு காசா- கான் யூனிஸ் நகருக்கு அருகில் உள்ள பாடசாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பாடசாலையில் போரினால் வீடுகளை இழந்த பலஸ்தீன மக்கள் முகாமிட்டு தங்க வைக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண முகமை என குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை
இதேவேளை, இஸ்ரேலிய இராணுவம் வடக்கு காசா பகுதியில் நடத்திய தாக்குதலில் பல குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் (Hamas) போராளிகளுக்கு இடையே 14 மாதங்களாக நடந்து வரும் போரில் காசா பகுதியில் மாத்திரம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45,000ஐ தாண்டியுள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |