காசா குறித்த ட்ரம்பின் அறிவிப்பு : இந்தியா - பாகிஸ்தானின் நிலைப்பாடு வெளியானது
அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த அமைதித் திட்டத்தின் சில பகுதிகளை ஹமாஸ் ஏற்றுக்கொள்வதாக அறிவித்ததை அடுத்து பல நாட்டு தலைவர்களும் தங்கள் நிலைப்பாட்டினை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், காசாவில் அமைதி முயற்சிகள் தீர்க்கமான முன்னேற்றத்தை அடைந்ததற்காக டொனால்ட் ட்ரம்பின் தலைமையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
அத்துடன், நீடித்த மற்றும் நியாயமான அமைதியை நோக்கிய அனைத்து முயற்சிகளையும் இந்தியா தொடர்ந்து வலுவாக ஆதரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் நிலைப்பாடு
அதேவேளை, ட்ரம்பின் திட்டத்திற்கு ஹமாஸின் பதில் வரவேற்கத்தக்க நடவடிக்கை என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
Hamas' response is a welcome step. This must now result in an immediate ceasefire, end to Palestinian suffering, ensure hostages release, and allow free flow of humanitarian aid. Israel MUST immediately stop its attacks.
— Ishaq Dar (@MIshaqDar50) October 4, 2025
We reaffirm Pakistan’s unwavering support for the…
இது இப்போது உடனடி போர்நிறுத்தத்திற்கு வழிவகுக்கும், பலஸ்தீனிய துன்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், பணயக்கைதிகள் விடுதலையை உறுதி செய்ய வேண்டும்.
மேலும் மனிதாபிமான உதவிகளை சுதந்திரமாக வழங்க அனுமதிக்க வேண்டும். இஸ்ரேல் உடனடியாக அதன் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் எனவும் பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் இஷாக் டார் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |