இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த கர்ப்பிணிப் பெண்: வயிற்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை

World Israel-Hamas War Gaza
By Laksi Jul 24, 2024 01:48 PM GMT
Laksi

Laksi

இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றிலிருந்த குழந்தையை உயிருடன்  காப்பாற்றியுள்ளதாக அந்நாட்டு வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், மத்திய காசாவில் உள்ள அகதிகள் முகாமில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்த ஓலா அட்னான் ஹர்ப் அல்-குர்த், என்பவர் படுகாயமடைந்துள்ளார்.

உயிரிழந்த கர்ப்பிணி

இந்த நிலையில்,  கர்ப்பிணிப் பெண் ஆபத்தான நிலையில் வருவதைக் கண்ட அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவர்கள் அவரை அவசர சிகிச்சைப்பிரிவிற்கு கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த கர்ப்பிணிப் பெண்: வயிற்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை | Israel Gaza War Newborn Saved From Dead Mother

இதனையடுத்து உயிரிழந்த கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த குழந்தையை காசா மருத்துவமனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்து காப்பாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், குழந்தைக்கு உடனடியாக சிகிச்சை அளித்ததையடுத்து தற்போது நலமுடன் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW