காசாவில் அடுக்கு மாடி கட்டிடம் மீது இஸ்ரேல் தாக்குதல்

Israel Middle East World Israel-Hamas War
By Rakshana MA Apr 10, 2025 05:08 AM GMT
Rakshana MA

Rakshana MA

இஸ்ரேல் (Israel) - காசா (Gaza) இடையிலான போர் நிறுத்தம் முடிவடைந்த நிலையில், காசாவில் நான்கு மாடி கட்டிடம் மீது நடத்தப்பட்ட இஸ்ரேலிய விமானம் தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளது.

இதில் 23 பேர் உயிரிழந்துள்ளதாக காசாவின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குறித்த தாக்குதலானது காசாவின் ஷிஜையா நகரில் உள்ள நான்கு மாடி கட்டிடம் மீது நடத்தப்பட்டுள்ளது. 

கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கடத்தல் வழக்கில் பிள்ளையான் கைது

கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கடத்தல் வழக்கில் பிள்ளையான் கைது

இஸ்ரேலின் தாக்குதல்

இந்த தாக்குதலானது ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவரை குறிவைத்து நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளதுடன் மக்கள் அதிகமாக வாழும் நகர்ப்புற பகுதிகளில் ஹமாஸ் பதுங்கியுள்ளனர் என்று இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது.

காசாவில் அடுக்கு மாடி கட்டிடம் மீது இஸ்ரேல் தாக்குதல் | Israel Attack On Gaza

இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போரில் காசாவில் உள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் நாட்டில் நுழைந்து நடத்திய தாக்குதில் 1200 பேர் கொல்லப்பட்டதுடன் 250க்கும் மேற்பட்டோரை பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

மேலும், இவர்களில் பெரும்பாலானோர் போர் நிறுத்தத்தின்போது விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நாவிதன்வெளியில் பிரமாண்ட பார்வையாளர் அரங்கு நிர்மாணிப்பு

நாவிதன்வெளியில் பிரமாண்ட பார்வையாளர் அரங்கு நிர்மாணிப்பு

இலங்கையில் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்

இலங்கையில் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்

        நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW