போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இஸ்ரேலும் லெபனானும்!

Israel Lebanon World
By Sajithra Jun 04, 2026 01:05 AM GMT

இஸ்ரேலும் லெபனானும் போர் நிறுத்தத்தை நடைமுறைபடுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை ஓர் அறிக்கையில் அறிவித்துள்ளது.

பிற நிபந்தனைகளுடன், ஹிஸ்புல்லாவின் தாக்குதல்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டால் மட்டுமே இந்த ஒப்பந்தம் சாத்தியமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நேற்று, தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டதற்கும், ஹிஸ்புல்லா வடக்கு இஸ்ரேல் மீது ரொக்கெட்டுகளை வீசியதற்கும் பிறகு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையிலான உறவின் எதிர்காலத்தை இரு இறையாண்மை கொண்ட அரசாங்கங்களே தீர்மானிக்க வேண்டும் என்பதை அனைத்து நாடுகளும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.

லெபனானின் எதிர்காலத்தைப் பணயக்கைதியாகப் பிடிக்கும் எந்தவொரு அரசு அல்லது அரசு சாரா அமைப்பின் முயற்சியையும் அவை நிராகரித்தன என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.