போர் நிறுத்ததத்திற்கு இணக்கம் தெரிவித்த இஸ்ரேல்
காஸா - இஸ்ரேல் போரானது இன்றுடன் 386 நாளை கடந்த நிலையில் தற்போது இஸ்ரேல் போரினை நிறுத்துவதற்கான இணக்கம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் இப்பேச்சு வார்த்தையானது அமெரிக்கா மற்றும் கட்டார் நாட்டின் தலைமையில் முன்னெடுக்கப்படவுள்ளது.
புதிய அமைதிப் பேச்சுவார்த்தை
இப் பேச்சு வார்த்தையானது எதிர் வரும் வாரங்களில் கட்டாரின் டோஹாவில் இடம்பெறவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இவ் யுத்தத்தில் 43,500 க்கும் அதிகமான பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் இஸ்ரேல் - ஹமாஸ் இற்கிடையில் ஆரம்பமான யுத்தம் தற்போது லெபனான், ஈரான் ஆகிய நாடுகள் வரை வியாபித்துள்ளது. இது உலகத்தை ஆபத்தான நிலைக்கு இட்டுச் செல்லும், ஆகவே இவ் ஆபத்துக்கான வாய்ப்புக்களை குறைக்கும் நோக்குடன் இந்த பேச்சு வார்த்தையானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இப்பேச்சு வார்த்தையில் அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பின் பணிப்பாளர் வில்லியம் பேர்ன்ஸ் மற்றும் இஸ்ரேலின் உளவுப்பிரிவு மொசாட்டின் தலைவர் டேவிட் பேர்னியா ஆகியோர் கலந்துக்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |