இலங்கைக்கான ஜப்பானிய தூதுவருக்கும் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு
Sri Lanka Upcountry People
Sri Lanka
Japan
Senthil Thondaman
By Laksi
இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் ஸ்சொமடோ அக்கியோ (Isomata Akio) இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமானை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த கலந்துரையாடலின் போது கடந்த காலங்களில் ஜப்பான் (Japan) தூதரகம் மலையக மக்களுக்கு பாரிய உதவிகளை வழங்கியது குறித்து செந்தில் தொண்டமான் நினைவூட்டியுள்ளார்.
வலுவான உதவி
இந்தநிலையில், மலையக மக்களுக்காக வலுவான உதவிகளை வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், புதிய ஜப்பான் தூதுவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ள நிலையில், மலையகத்திற்கு முதல் விஜயம் மேற்கொள்ளுமாறு செந்தில் தொண்டமான் அழைப்பு விடுத்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |