இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் காணிப் பயன்பாடு தொடர்பான விளக்கமளித்தலும் வலுவூட்டலும்!

Ampara Sri Lanka Sri Lankan Schools
By Harrish Jul 24, 2024 10:04 PM GMT
Harrish

Harrish

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் காணிப் பயன்பாடு தொடர்பான விளக்கமளிக்கும் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வானது நேற்று(24.07.2024) பாடசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.

காணிப் பயன்பாடு

பாடசாலையின் அதிபர் ஏ.ஜீ.எம்.றிசாத்தின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு கல்முனை பிரதேச செயலகத்தின் காணிப் பயன்பாட்டு உத்தியோகத்தர் ஐ.எம் ஜௌபர்  சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் காணிப் பயன்பாட்டு உத்தியோகத்தர் ஏ.எச். எம்.சஞ்சீர் மாணவர்களுக்கு காணிப் பயன்பாடுகள் தொடர்பான விளக்கங்களை அளித்துள்ளனர்.

இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் காணிப் பயன்பாடு தொடர்பான விளக்கமளித்தலும் வலுவூட்டலும்! | Islamabad Muslim Maha Vidyalaya Land Use

மேலும், காணிப் பயன்பாடுகளை நாம் எவ்வாறு கையாளவேண்டும், அதன் தன்மைகள், அமைப்புக்கள் பற்றி அறிந்து எவ்வாறான வேலைத் திட்டங்களை இலகுவாக மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பான விளக்கங்களையும் காணொளி மூலம் மாணவர்களுக்கு முன்வைத்துள்ளனர்.

இந்நிகழ்வில் ஆலோசனை வழிகாட்டல் பிரிவுக்குப் பொறுப்பான ஆசிரியரும், மாணவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் காணிப் பயன்பாடு தொடர்பான விளக்கமளித்தலும் வலுவூட்டலும்! | Islamabad Muslim Maha Vidyalaya Land Use

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGallery