இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த ஈரான்!
ஈரானில் அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 5 ஆயிரத்திற்குக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா.மனித உரிமைகள் கவுன்சிலின் சிறப்பு அமர்வில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
சிறப்பு அமர்வில் தீர்மானம்
இத்தீர்மானத்துக்கு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள், இங்கிலாந்து மற்றும் ஐஸ்லாந்து உட்பட 25 நாடுகள் ஆதரவு தெரிவித்தன.

இந்தியா, சீனா, பாகிஸ்தான், இந்தோனேசியா, ஈராக் உட்பட 7 நாடுகள் எதிராக வாக்களித்தன. 14 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் விலகின.
இந்த நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் தீர்மானத்தில் தங்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்த இந்தியாவுக்கு ஈரான் நன்றி தெரிவித்தது.
இதுதொடர்பாக இந்தியாவுக்கான ஈரான் தூதர் முகமது பதாலி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்து நீதி, பன்முகத்தன்மை மற்றும் தேச இறையாண்மைக்கு எப்போதும் ஆதரவளிக்கும் நாடு என இந்தியா நிரூபித்து உள்ளது என குறிப்பிட்டார்.