கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்ற முறைகேடுகள்! விசாரணை ஆணைக்குழு நியமிப்பு
கொழும்பு மாநகர சபையில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரித்து, ஆய்வு செய்து, அறிக்கை அளிப்பதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
விசேட வர்த்தமானி
அதன்படி, முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க, பட்டய கணக்காளர் ஈ.ஆர்.எம்.எஸ்.எச்.ஏக்கநாயக்க மற்றும் முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.எஸ். விக்ரமசிங்க ஆகியோரை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக நியமித்துள்ளார்.
இது தொடர்பான விசேட வர்த்தமானி ஜனாதிபதியின் செயலாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
2010 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் கொழும்பு மாநகர சபைக்குள் நடந்ததாகக் கூறப்படும் ஊழல், மோசடி, குற்றவியல் நம்பிக்கை மோசடி மற்றும் சொத்துக்களை குற்றவியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்தல் ஆகிய குற்றங்களை விசாரிக்க இந்த ஆணையகம் பணிக்கப்பட்டுள்ளது.