குடும்ப உறுப்பினர்களுக்கும் காப்புறுதி கோரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

Parliament of Sri Lanka Sri Lanka Politician Sri Lanka
By Aanadhi Apr 11, 2024 10:38 PM GMT

நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் தங்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் காப்பீடு திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தற்போதைய நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே அவர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தின் பயனாளிகளாக உள்வாங்கப்பட்டுள்ளனர்.

வருடமொன்றுக்கு அவர்களுக்கு பத்து லட்சம் ரூபா வரை காப்பீட்டுத் தொகை வழங்கப்படுகின்றது. 

விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

இந்நிலையில், தங்கள் சம்பளத்தில் இருந்து ஒரு தொகையை அறவிட்டேனும் தங்கள் குடும்ப உறுப்பினர்களையும் காப்பீட்டு திட்ட பயனாளிகளாக உள்வாங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலரும் நாடாளுமன்றத்தின் உயர் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

insurance-for-family-members-of-parliament-mps

இது தொடர்பில் நாடாளுமன்ற அவை மேற்பார்வைக் குழுவின் அடுத்த கூட்டத்தின் ​போது கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னின்று செயற்பட்டுக் கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.