பல்கலை விரிவுரையாளர்களால் ஏழை மாணவர்களுக்கு ஏற்படும் அநீதி!
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடாதமை, வசதி படைத்தவர்களின் பிள்ளைகளுக்கன்றி சாதாரண மக்களின் பிள்ளைகளுக்கே அநீதியாக அமையுமென ஊடகத்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இக்காலங்களில் அரசியல்வாதி கள் மற்றும் வர்த்தகர்களின் வசதி படைத்த பிள்ளைகள், லண்டன் சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றி அதனையடுத்து சர்வதேச பல்கலைக் கழகங்களில் டிப்ளோமோ கற்று பட்டப்படிப்பை மேற்கொள்ள வெளிநாடு செல்வதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அவர்களின் பெற்றோரிடம் பணம் இருப்பதால் அவர்களால் அதனை சுமக்க முடியும். எனினும், நாட் டிலுள்ள சாதாரண மக்களின் பிள்ளைகள் எமது நாட்டிலுள்ள பாட சாலைகளில் உயர்தர பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர். அவர்களுடைய எதிர்காலத்தையே இந்த பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பாதிப்ப டையச் செய்கின்றனர் என்றார்.