நாட்டை விட்டு வெளியேறிய குற்றவாளிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை: வெளியான அதிர்ச்சித் தகவல்

CID - Sri Lanka Police Crime Branch Criminal Investigation Department Crime
By Fathima Feb 16, 2024 03:57 AM GMT
Fathima

Fathima

நாட்டை விட்டு தப்பிச் சென்ற குற்றவாளிகளுக்கு இதுவரை 42 சர்வதேச சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தகவலை பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக புதிய பொலிஸ் நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பாதாள உலக உறுப்பினர்கள்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டை விட்டு வெளியேறிய குற்றவாளிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை: வெளியான அதிர்ச்சித் தகவல் | Infromation About Criminals Left The Country

பாதாள உலக உறுப்பினர்கள் மற்றும் போதைப்பொருள் குற்றச் செயல்களில் ஈடுபட்டு நாட்டை விட்டு தப்பிச் சென்ற குற்றவாளிகளுக்கு இதுவரை 42 சர்வதேச சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த சிவப்பு அறிவிப்புக்களை வெளியிட்ட சந்தேக நபர்கள் சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார்கள் என தேசபந்து தென்னக்கோன் குறிப்பிட்டுள்ளார்.