பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

Sri Lanka Economy of Sri Lanka Sri Lanka Fuel Crisis
By Fathima Apr 02, 2023 02:15 PM GMT
Fathima

Fathima

முட்டையின் விலை 35 ரூபாவாக குறைக்கப்பட்டால் பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி பொருட்களின் விலை குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் எரிபொருளின் விலை குறைந்தாலும் பேக்கரி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல் | Information Regarding Price Bakery Products

பிரச்சினைகளுக்கு தீர்வு 

இந்நிலையில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் கிடைத்துள்ள நிலையில், ஒரு வாரத்திற்குள் முட்டை சந்தையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.