பரீட்சை நேர அட்டவணையை புதுப்பிக்க திட்டம்! கல்வி அமைச்சர் அறிவிப்பு

Ministry of Education A D Susil Premajayantha Education
By Mayuri Jul 25, 2024 09:08 AM GMT

பரீட்சைகளுக்கான நேர அட்டவணையை புதுப்பிப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பிட்டிபனையில் உள்ள களஞ்சியசாலையில் பாடசாலைப் பாடப்புத்தகங்களை விநியோகிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த வருடத்துக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை அடுத்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்

அத்துடன், ஏற்கனவே திட்டமிட்டபடி, நிறைவடைந்துள்ள கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வெளியாகும் சாத்தியம் உள்ளது. 

பரீட்சை நேர அட்டவணையை புதுப்பிக்க திட்டம்! கல்வி அமைச்சர் அறிவிப்பு | Information Ministry Of Education Examinations

அதேவேளை, உயர்தரம் மற்றும் ஏனைய பரீட்சைகளை அதற்கு முன்னர் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW