பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த இண்டிகோ விமானத்தினால் பரபரப்பு
Indicom
Pakistan
India
Weather
By Fathima
இந்தியாவின் இண்டிகோ விமானம் நேற்று இரவு பாகிஸ்தான் வான் எல்லைகுள் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத் நோக்கி நேற்று இரவு இண்டிகோ பயணிகள் விமானம் புறப்பட்டுள்ளது.
இதன்போது விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்த நிலையில் திடீரென இரவு 7.30 மணி முதல் 8 மணி வரை இண்டிகோ விமானம் பாகிஸ்தானின் வடக்கு லாகூர் வான்பரப்பில் நுழைந்துள்ளது.
மோசமான வானிலை காரணமாக இவ்வாறு இண்டிகோ விமானம் பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்துள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர், மீண்டும் இந்திய வான் எல்லைக்குள் நுழைந்து அகமதாபாத்தில் பத்திரமாக தரையிறங்கியுள்ளது.