பிரதமரை சந்தித்த இந்திய விமானப் படை பிரதானி(Video)
இந்திய விமானப் படை பிரதானி ஏர் சீஃப் மார்ஷல் சௌதரி, பிரதமர் தினேஷ் குணவர்த்தனவை இன்று(03.05.2023) சந்தித்துள்ளார்.
இந்திய விமானப் படை பிரதானி ஏர் சீஃப் மார்ஷல் சௌதரி, நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு நேற்று முன்தினம்(01.05.2023) வந்துள்ளார்.
இலங்கைக்கான விஜயத்தின் போது ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்புத் துறை அமைச்சர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை ஏர் சீஃப் மார்ஷல் சௌதரி சந்திக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இந்திய அரசாங்கத்தின் (GOI) 250 மில்லியன் மானிய உதவியின் கீழ், திருகோணமலையில் உள்ள இலங்கை விமானப்படை கல்லூரியில், இந்திய-இலங்கை நட்புறவு பார்வையாளர் அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் அவர் பங்கேற்கவுள்தாக தகவல் வெளியாகியுள்ளது.




