நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் 39,698 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, மேல் மாகாணத்தில் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தற்போது 16,766 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் இந்த மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
டெங்கு நோயாளர்கள்
அத்தோடு, வடமாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 4,792 நோயாளர்களும், மத்திய மாகாணம் கண்டி மாவட்டத்தில் 4,091 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
சப்ரகமுவ மாகாணம், கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் 4,012 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
மேலும், இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 19 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |