அரச நிர்வாக சேவைகளுக்கான பதவி வெற்றிடங்கள் அதிகரிப்பு
Sri Lanka
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
Job Opportunity
By Rakshana MA
அரச நிர்வாக சேவைகளில் 1,200க்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் காணப்படுவதாக இலங்கை அரசாங்க நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
கணக்காய்வு சேவை மற்றும் பொது நிர்வாக சேவை போன்றவற்றில் அதிக வெற்றிடங்கள் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.
வேலைக்கான வெற்றிடங்கள்
மேலும், பொறியியல் துறையில் 250 ற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
இவ் வேலைகளுக்கான தகுதிவாய்ந்த பணியாட்களை விரைவில் உள்ளெடுக்க திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் அனைத்திற்கும் பொறுப்பானஇலங்கை அரசாங்க நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |