அரசாங்கத்தின் வருமானம் அதிகரிப்பு
Sri Lanka
Government Of Sri Lanka
Economy of Sri Lanka
By Laksi
2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த வருடம் அரசாங்கத்தின் வருமானம் 32.2% அதிகரித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் அரசாங்க நிதிக் குழுவின் தலைவருமான ஹர்ஷ டி சில்வா (Harsha de Silva) தெரிவித்துள்ளார்.
மத்திய ஆண்டு நிதி நிலை அறிக்கையை இன்றையதினம்(07.01.2025) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார வளர்ச்சி
அத்தோடு, நாட்டு மக்கள் அனுபவிக்கும் பொருளாதார நெருக்கடியை இல்லாதொழிக்க கட்சி பேதமின்றி செயற்பட தயார் எனவும் அரசாங்க நிதிக் குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த அரசாங்கத்தின் போதும் பொருளாதார வளர்ச்சிக்காக ஒன்றிணைந்து செயற்பட்டதாகவும் ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |