அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து வெளியான தகவல்

Parliament of Sri Lanka Government Employee Sri Lanka Government Of Sri Lanka
By Laksi Jan 09, 2025 09:30 AM GMT
Laksi

Laksi

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பளம் குறிப்பிடத்தக்களவு உயர்த்தப்படும் என தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க (Mahinda Jayasinghe) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று (09) கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு,அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதில் சர்வதேச நாணய நிதியத்திற்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுங்கள்: ஹிஸ்புல்லாஹ் எம்.பி கோரிக்கை

கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுங்கள்: ஹிஸ்புல்லாஹ் எம்.பி கோரிக்கை

சம்பள அதிகரிப்பு

25000 ரூபா சம்பள அதிகரிப்பு ஏற்படும் என்று கூற முடியாது. எனினும் அரச ஊழியர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையிலான அதிகரிப்பு ஏற்படும் என அவர் உறுதியளித்தார்.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து வெளியான தகவல் | Increase In Salary Of Government Employees

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது அரச ஊழியர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்பள அதிகரிப்பு தொடர்பான அமைச்சரவை தீர்மானம் ஒன்றை எடுத்தார்.

இது அரசு ஊழியர்களை தவறாக வழிநடத்துவதற்காக வழங்கப்பட்ட முடிவே தவிர உண்மையான முடிவல்ல.

எனினும் அரச ஊழியர்கள் சரியான தீர்ப்பினை அவருக்கு வழங்கியுள்ளார்கள் என பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

வாகன வருமான வரி கட்டணங்களை உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்குமாறு அஷ்ரப் தாஹிர் எம்.பி.கோரிக்கை

வாகன வருமான வரி கட்டணங்களை உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்குமாறு அஷ்ரப் தாஹிர் எம்.பி.கோரிக்கை

திருகோணமலை நகரை தூய்மைப்படுத்தும் விஷேட செயற்திட்டம்

திருகோணமலை நகரை தூய்மைப்படுத்தும் விஷேட செயற்திட்டம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW