பொதுத் தேர்தல்: அதிகரிக்கும் விதிமீறல்கள்
எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணி நேரத்தில் 33 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வேட்பு மனுத் தாக்கல் செய்த ஓரிரு நாட்களில் தேர்தல் விதிமீறல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, இதுவரை 290 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விதிமீறல்கள்
அத்தோடு, இதுவரை தேர்தல் குறித்த வன்முறை சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பான முறைப்பாடுகளே இதுவரை கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் இதுவரையான முறைப்பாடுகளில் 211 முறைப்பாடுகளுக்கான தீர்வுகள் கண்டறியப்பட்ட நிலையில், 79 முறைப்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |