லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை உயர்வு

LAUGFS Gas PLC
By Laksi Nov 13, 2026 04:49 PM GMT

சமையல் எரிவாயு சிலிண்டர்களின் மீள்நிரப்பு விலைகளை அதிகரிப்பதற்கு லாஃப்ஸ் (LAUGFS) எரிவாயு நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தத் திருத்தப்பட்ட புதிய விலைகள் இன்று (13) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளன.

இதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய வீட்டுப் பாவனை எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 1,775 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

விலை உயர்வு

இதன்படி, 4,965 ரூபாவாக இருந்த குறித்த சிலிண்டரின் புதிய விலை 6,740 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, 5 கிலோகிராம் நிறையுடைய வீட்டுப் பாவனை எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 732 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 1,988 ரூபாவாக இருந்த அதன் புதிய விலை 2,720 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.