வரதட்சணை என்ற பெயரில் ....

Sri Lanka
By Nafeel May 02, 2023 03:39 PM GMT
Nafeel

Nafeel

Mahir Mohideen


இளைய சமுதாயமே....!

திருமணம் முடிப்பதினால் ....

நீங்கள் எதையாவது தியாகம் செய்கிறீர்களா ....?

ஆனால் ...... ..

உங்களுக்கு மனைவியாக வருகிறவள் என்னவெல்லாம் தியாகம் செய்து வருகிறாள் என்று நீங்கள் சிந்தித்ததுண்டா ...?

உனக்காக - தன் உறவுகளை தியாகம் செய்கிறாள் ....

உனக்காக - தன் உடன்பிறப்புகளை தியாகம் செய்கிறாள் ....

உனக்காக - தனது எதிர்பார்ப்புகளை தியாகம் செய்கிறாள் ....

உனக்காக - தனது இளமை , அழகை தியாகம் செய்கிறாள் ....

உனக்காக - குழந்தையை சுமக்கிறாள் .....

உனக்காக - கஷ்டத்தை சுமக்கிறாள் .....

இன்பம் அனுபவிப்பது இருவரும் ...... .

ஆனால் ....

கஷ்டப்படுவது அவள் மட்டும் .....!

இப்படி ...

தியாகத்தையே வாழ்க்கையாக அனுபவிக்கும் அவளுக்கு ...

நீ மஹர் கொடுத்து மணமுடிப்பதுதானே ...

உண்மையான மனிதாபிமானம் .....?

ஆனால் ....

வரதட்சணை என்ற பெயரில் ....

எப்படி அவளித்தில் பிடுங்கி திங்க உனக்கு மனசு வருகிறது ...?

உனக்கு வெட்கமா இல்லையா ........?....?

அல்லாஹ்வை அஞ்சிக்கொள்....!

மறுமையில் இறைவன் முன்னால் நீ கேவலப்பட்டு விடாதே.....!