புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 10.00 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முக்கிய அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தில் பங்குபற்றவிருக்கும் உறுப்பினர்கள் அனைவரையும் மு.ப 9.00 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்திற்கு வருகை தருமாறு நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர அறிவித்துள்ளார்.
ஒழுங்கு செய்யப்பட்ட சேவைகள்
தொடர்ந்தும் தெரிவிக்கையில், நாடாளுமன்றத்திற்கு வரும்போது உறுப்பினர்களின் வாகனங்கள் பொலிஸாரால் அவற்றுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிறுத்தலிடங்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுப்பினர்களின் கூடங்களில் நுழைவதுடன் வாக்கழைப்பு மணியோசை அடிக்கும் வரை அங்கு தங்கியிருத்தல் வேண்டும்.
துணைவி அல்லது துணைவரோடு வருகின்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் நுழைவாயில் அருகில் இறங்க வேண்டும், மற்ற எல்லா உறுப்பினர்களும் உறுப்பினர்களின் நுழைவாயிலின் அருகில் இறங்க வேண்டும் என்றும் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |