சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
Badulla
Crime
Sri Lanka Customs
By Laksi
நாட்டிற்கு சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்டு அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரி வருமானத்தை புறக்கணித்திருந்த ஜீப் வாகனமொன்றை அரசுடமையாக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கமைய கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அதிகமான வரி மோசடி
போலியான தகவல்களை சுங்கத் திணைக்களத்தில் சமர்ப்பித்து அரசாங்கத்திற்கு ஐந்தரை கோடிக்கும் அதிகமான வரியை மோசடி செய்து இந்த ஜீப் வாகனம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பதுளை பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடம் இருந்த அதிசொகுசு ஜீப் வாகனமே இவ்வாறு அரசுடமையாக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |