சட்டவிரோத மதத் தலங்களுக்கு அனுமதியில்லை: புத்தசாசன அமைச்சர் திட்டவட்டம்
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் சட்டவிரோத மதத் தலங்களுக்கு ஒருபோதும் அனுமதி வழங்கப்படமாட்டாது என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி (Hiniduma Sunil Senevi) தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், "கடந்த அரசுகள் போல் இந்த அரசையும் எவரும் நினைத்துவிடக்கூடாது.
அராஜக நடவடிக்கை
இது குறுக்குவழியில் வந்த அரசு அல்ல. ஆட்சி மாற்றத்தை விரும்பிய மக்கள் அலையால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசே இது.கடந்த ஆட்சிகள் போல் இந்த ஆட்சியில் சட்டவிரோத மதத் தலங்களுக்கு ஒருபோதும் அனுமதி வழங்கப்படமாட்டாது.
கடந்த ஆட்சிகளில் சட்டவிரோத மதத் தலங்களே மத வன்முறைக்கு வழிவகுத்தது. அது இறுதியில் இன வன்முறையாக வெடித்தது.
அப்படியான அராஜக நடவடிக்கைகளை இந்த ஆட்சியில் எதிர்பார்க்க முடியாது. குழப்பவாதிகள் எவரும் இருந்தால் அவர்கள் பாரபட்சமின்றி தண்டிக்கப்படுவார்கள். சட்டம் தனது கடமையைச் சரிவரச் செய்யும்."என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |