கடவத்தையில் சட்டவிரோத விருந்து: பலர் போதைப்பொருட்களுடன் கைது
Gampaha
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Harrish
Courtesy: Sivaa Mayuri
கம்பஹா, கடவத்தையில் இடம்பெற்ற சட்டவிரோத விருந்தொன்றை பொலிஸார் முறியடித்துள்ளனர்.
இதன்போது, போதைப்பொருளுடன் 14 பேர் வரை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த இடத்தில் சில அறைகளில் தங்கியிருந்தவர்களிடம் இருந்தும் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது நடவடிக்கை
அத்துடன், 19 மற்றும் 37 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ள பொலிஸார், அவர்களிடம் ஐஸ் மற்றும் கொக்கெய்ன் போன்ற போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.
மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இதுபோன்ற நிகழ்வுகள் இதற்கு முன்னரும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.