மட்டக்களப்பில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது

Batticaloa Sri Lankan Peoples Eastern Province Crime
By Rakshana MA Aug 09, 2025 09:19 AM GMT
Rakshana MA

Rakshana MA

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள புன்னைச்சோலை பிரதேசத்தில் போயா தினமான நேற்று (08) சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட பெண் வியாபரி கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து 60 மதுபான போத்தல்களும், 4490 ரூபா பணமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான நேற்று பகல் குறித்த பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றை பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.

க.பொ.த. உயர்தர பரீட்சை : கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

க.பொ.த. உயர்தர பரீட்சை : கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

கைது நடவடிக்கை

இதன்போதே குறித்த சந்தேகநபர் சிக்கியுள்ளார்.சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மட்டக்களப்பில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது | Illegal Liquor Sale Arrest In Batticaloa

ஓய்வூதிய நிலுவை தொகை தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

ஓய்வூதிய நிலுவை தொகை தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியகிய தகவல்

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியகிய தகவல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW  



GalleryGallery