மட்டக்களப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

Batticaloa Eastern Province Crime
By Laksi Nov 08, 2024 07:40 AM GMT
Laksi

Laksi

மட்டக்களப்பு (Batticaloa)- தாந்தாமலை, மாவடிமுன்மாரி பிரதேசத்திலுள்ள ஆற்றுப்பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது.

குறித்த முற்றுகை நடவடிக்கையானது நேற்று (07) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிராமத்தின் பொதுமக்கள் கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட தேடுதலின் போது இந்த பகுதி முற்றுகையிடப்பட்டுள்ளது.

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

கசிப்பு உற்பத்தி

இதன்போது, சட்டவிரோத உற்பத்திக்கு தயாரான கோடா ஆறு ( 06) பரல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை | Illegal Leaching Plant Blockaded In Batticaloa

இந்தநிலையில், கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர்கள் தப்பி ஓடியுள்ளதாகவும் கைப்பற்றப்பட்ட கோடா பரல்கள் அவ்விடத்தில் அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல் அலுவலகத்தின் மீது தாக்குதல்: சந்தேக நபர் கைது

முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல் அலுவலகத்தின் மீது தாக்குதல்: சந்தேக நபர் கைது

மட்டக்களப்பில் மின்னல் தாக்கி விவசாயி உயிரிழப்பு

மட்டக்களப்பில் மின்னல் தாக்கி விவசாயி உயிரிழப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW