முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல் அலுவலகத்தின் மீது தாக்குதல்: சந்தேக நபர் கைது
பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் தலைமை வேட்பாளரான எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அலுவலகத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காத்தான்குடி ரிஸ்வி நகர் முதலாம் வட்டாரம் ஓடாவியார் வீதியில் அமைந்திருந்த தேர்தல் அலுவலகத்தின் மீதே இன்று (7) அதிகாலை குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அத்தோடு ,இந்த சம்பவம் தொடர்பில் புதிய ஜனநாயக முன்னணி கட்சியைச் சேர்ந்த ஆதரவாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் சிலர் தேடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
இந்த நிலையில், அலுவலகத்துக்கு முன்னால் போடப்பட்டிருந்த பெரிய அளவிலான பதாதைகள் அறுத்து சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன் அங்கு ஒட்டப்பட்டிருந்த துண்டுப்பிரசுரங்களும் சந்தேக நபர்களினால் கிழித்து வீசப்பட்டுள்ளன.
இன்று அதிகாலை ஒரு மணி அளவில் அலுவலகத்தில் உள்ள குறித்த கட்சியின் ஆதரவாளர்கள் உரையாற்றிக் கொண்டிருந்தபோது அலுவலகத்திற்கு வெளியில் மேற்படி தாக்கல் நடத்தப்பட்டுள்ளதாகவும் அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் வெளியே வந்து பார்த்தபோது சம்பந்தப்பட்டவர்கள் தப்பி ஓடிய விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |