குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாத அரசு நிறுவனங்கள் குறித்த முடிவு
நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரைகளை, சம்பந்தப்பட்ட பொறுப்பு நிறுவனங்கள் நடைமுறைப்படுத்தாததை மறுஆய்வு செய்வது தொடர்பில் புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போது அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார(Harshana Nanayakkara) தலைமையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, நாடாளுமன்றக் குழுக்களால் வழங்கப்பட்ட, இதுவரை நடைமுறைப்படுத்தப்படாத பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த ஒரு மாத கால அவகாசம் வழங்க முடிவு செய்துள்ளது.
பொது நிறுவனங்கள் குழு, பொதுக் கணக்குகள் குழு மற்றும் பொது நிதி குழுவால் வழங்கப்பட்டு, இதுவரை நடைமுறைப்படுத்தாத பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த இந்த கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றக்குழு
அப்போது, எந்தக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை, எதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும் என்பது குறித்து குழு விவாதித்துள்ளது.
இந்நிலையில், 9வது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வில் பொது மனுக்கள் குழு அளித்த பரிந்துரைகளில் 80க்கும் மேற்பட்டவை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
அதன்படி, நடைமுறைப்படுத்தப்படாத பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த சம்பந்தப்பட்ட அமைச்சக செயலாளர்களுக்கு கடிதங்கள் அனுப்பவும், ஒரு மாதத்திற்குள் அந்தப் பரிந்துரைகளை செயல்படுத்த முடியாவிட்டால், அதற்கான காரணங்களை குழுவிடமிருந்து எழுத்துப்பூர்வமாகப் பெறவும் முடிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
[0MT66SU
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |