முல்லைத்தீவில் இப்தார் நிகழ்வும் உலர் உணவு பொதி வழங்கி வைப்பும்!(photos)
Mullaitivu
Sri Lanka
Sri Lankan Peoples
By Fathima
முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசத்தில் இப்தார் நிகழ்வும் உலர் உணவு பொதி வழங்கும் நிகழ்வும் நடைபெற்றுள்ளது.
எக்டோ தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் நேற்றையதினம் (22.04.2023) இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
எக்டோ தொண்டு நிறுவனம்
மேலும், எக்டோ தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன், முல்லைத்தீவு - கரைத்துரைபற்று பிரதேச செயலாளர் பிரிவில், நீராவிபிட்டி கிச்ராபுரம் கிராம பகுதியிலுள்ள முஸ்லிம் சமூகத்தினரும் ஒன்றிணைத்து நடத்தியுள்ளனர்.
நிவாரண பொதி வழங்கல்
நோன்பு திருநாளை முன்னிட்டு, குறித்த பகுதியில் உள்ள 50 முஸ்லிம் குடும்பங்களுக்கான நிவாரண
பொதிகளை எக்டோ நிறுவனத்தினால் வழங்கி
வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .



