அக்கறைப்பற்று மக்களிடம் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை

Ranil Wickremesinghe Election Sri Lanka Presidential Election 2024
By Mayuri Aug 24, 2024 02:48 AM GMT
Mayuri

Mayuri

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் போது தேசத்தைப் பற்றி சிந்திக்குமாறு, கிழக்கின் அக்கரைப்பற்று நகர மக்களிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வருட ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும்போது, என்னைப் பற்றி சிந்திக்காமல், எதிர்காலத்தைப் பற்றி சிந்தியுங்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அக்கரைப்பற்றில் இடம்பெற்ற தேசிய காங்கிரஸின் 20வது மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி இந்த கருத்துக்களை கூறியுள்ளார்.

முஸ்லிம்களுக்கு அநீதி

அவர் மேலும் தெரிவிக்கையில், நான் சிங்களவர், முஸ்லிம்கள் மற்றும் தமிழர்களை ஒரே மாதிரியாக நடத்துவேன். தொற்றுநோய் பரவிய காலத்தில் பலவந்தமாக அடக்கம் செய்யப்பட்டதன் மூலம் இந்நாட்டில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது.

அக்கறைப்பற்று மக்களிடம் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை | I Will Treat People All Races Equally Ranil

அதனை எனது அரசாங்கம் செய்யவில்லை. அதை இன்னொரு அரசாங்கமே செய்தது. எனினும் அதற்காக மன்னிப்பை கோரினேன். வலுக்கட்டாயமாக அடக்கம் செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கு இழப்பீடு வழங்கவும் தயாராக உள்ளோம்.

இந்த நிலையில், ஒருவரின் கடைசி உரிமைகள் எவ்வாறு நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உத்தரவாத சட்டத்தை கொண்டு வருமாறு அமைச்சர் அலி சப்ரியிடம் நான் கோரிக்கை விடுத்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளார். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW