நாடாளுமன்ற உறுப்பினராவதற்கு தமக்கு சந்தர்ப்பம் வழங்குமாறு எம்.எஸ்.தௌபீக் கோரிக்கை
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராவதற்கு தமக்கு மீண்டும் ஒரு முறை சந்தர்ப்பம் தருமாறு ஐக்கிய மக்கள் கூட்டணியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தாம் வெற்றியீட்டி ஆளுந்தரப்பிலோ எதிர்த் தரப்பிலோ நாடாளுமன்ற உறுப்பினராகினால் மக்கள் குறைகளை தீர்த்து வைப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிண்ணியாவில் உள்ள மத்திய காரியாலயத்தில் நேற்று (27) இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தல்
தொடர்ந்தும் தெரிவிக்கையில், கடந்த 2020 ஆம் ஆண்டில் அமோக வெற்றிவாகை சூடிய நான் இம்முறை அதனை விட மூன்று மடங்கு களத்தில் இறங்கியுள்ளேன்.
வீட்டுக்கு வீடு பிரச்சாரப் பணியில் திருகோணமலை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் திறம்பட கட்சி ஆதரவாளர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறேன்.
24 வருட கால அரசியலில் சமூகத்துக்காக தன்னை அர்ப்பணம் செய்து பல அபிவிருத்திகளை குக்கிராமம், நகரம் என செய்துகாட்டியுள்ளேன்.
இந்த முறையும் நாடாளுமன்றம் செல்ல வேண்டும். திருகோணமலை மாவட்டம் இரு ஆசனங்களை வெற்றி கொள்ளக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.
இதனால் ஆளுங்கட்சி அரசாங்க பிரதிநிதியாகவோ அல்லது எதிர்க்கட்சி பிரதிநிதியாகவோ எதுவாக இருந்தாலும் மக்கள் குறைகள் தீர்க்கப்பட்டு சேவைகள் இடம்பெறும் என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |