சம்பூரில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புகள் குறித்து வெளியான நீதிமன்ற உத்தரவு

Trincomalee Sri Lankan Peoples Eastern Province chemmani mass graves jaffna
By Rakshana MA Jul 23, 2025 12:30 PM GMT
Rakshana MA

Rakshana MA

சம்பூரில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகள் குறித்து கன்னிவெடி அகற்றும் குழுவின் அறிக்கையின் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என  மூதூர் நீதவான் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பெளசான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த உத்தரவானது, இன்று (23) அறிவித்துள்ளார்.

அதன்படி, சம்பூரில் மனித மண்டையோடு மற்றும் எலும்பு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட காணியில் தொடர்ந்து அகழ்வுகளை மேற்கொள்ள வேண்டுமா? இல்லையா? என்று எதிர்வரும் 30 ஆம் திகதி சட்ட வைத்திய அதிகாரி, கன்னிவெடி அகற்றும் குழுவின் ஆலோசனைகளுடன் அறிக்கை தர வேண்டும்.

அஸ்வெசும உதவித் தொகை பெறுவோருக்கு வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு

அஸ்வெசும உதவித் தொகை பெறுவோருக்கு வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு

மனித எச்சங்கள்...

அதேவேளை, இப்பகுதியில் முன்னர் மயானம் ஏதும் இருந்ததா? என்பது பற்றி தொல்பொருள் திணைக்களம் அறிக்கையை முன்வைக்க வேண்டும் அவ் அறிக்கைகளின் படி அகழ்வு பற்றி தீர்மானம் மேற்கொள்ளப்படும் உத்தரவிடப்பட்டது.

சம்பூரில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புகள் குறித்து வெளியான நீதிமன்ற உத்தரவு | Human Bones Found In Sampur

கடந்த 19 ந் திகதி கன்னிவெடி அகற்றும் குழுவினர் இப்பகுதியில் அகழ்வு செய்த போது மனித எலும்பு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதனை அடுத்து மூதூர் பதில் நீதிவானின் உத்தரவை அடுத்து அகழ்வுப் பணிகள், நேற்று (22) செவ்வாய்க்கிழமை வரை இடைநிறுத்தப்பட்டன.

சம்பூரில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புகள் குறித்து வெளியான நீதிமன்ற உத்தரவு | Human Bones Found In Sampur

இந்நிலையில் மூதூர் நீதிவானின் தலைமையில் சட்ட வைத்திய அதிகாரி,பொலிஸ் தடயவியல் பிரிவினர், அரச பகுப்பாய்வு அலுவலர்கள், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், புவிச்சரிதவியல் மற்றும் சுரங்க பணியக அலுவலர்கள், காணாமல் போனோர் அலுவலக ஆணையாளர் மிராஜ் ரஹீம் ஆகியோர் முன்னிலையில் கள ஆய்வுகள், புதன்கிழமை (23) நடைபெற்றன.

அரசாங்க வாகன ஏல விற்பனையில் பாரிய முறைகேடு!

அரசாங்க வாகன ஏல விற்பனையில் பாரிய முறைகேடு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடு குறித்து வெளியான அறிவிப்பு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடு குறித்து வெளியான அறிவிப்பு!

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW