பரிந்துரைகளை செயல்படுத்தாத அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

Human Rights Commission Of Sri Lanka Sri Lankan Peoples
By Rakshana MA Jul 15, 2025 09:52 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கை மனித உரிமைகள் ஆணைககுழு தனது பரிந்துரைகளை செயல்படுத்தாத அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் என அறிவித்துள்ளது.

இது குறித்து அனைத்து அமைச்சக செயலாளர்கள், மாகாண தலைமைச் செயலாளர்கள், மாகாண சபை தலைமைச் செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் மற்றும் கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்டப்பூர்வ சபைகள் தலைவர்களுக்குத் தெரிவிக்கவும் மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

டொலர் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

டொலர் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

மேன்முறையீட்டு தாக்கல் 

மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் பரிந்துரைகளில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்திற்குள் பரிந்துரைகளை செயல்படுத்த அந்த நபர்கள் எடுத்த அல்லது எடுக்க எதிர்பார்க்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

பரிந்துரைகளை செயல்படுத்தாத அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை | Hr Commission Warns Non Compliant Officials

எனினும், ஆணைக்குழு தனது பரிந்துரைகளை வெளியிட்ட பிறகு, மேல்முறையீடுகள் தாக்கல் செய்யப்பட்டதிலிருந்து பரிந்துரைகள் செயல்படுத்தப்படவில்லை என்று சில அதிகாரிகள் மற்றும் நிறுவனங்கள் கூறியுள்ளன.

இந்த உண்மைகளின் அடிப்படையில், ஆணைக்குழு சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட பரிந்துரைகளை மீண்டும் மேல்முறையீடு செய்வதற்கான வழிமுறை இல்லாததால், மேல்முறையீடுகள் சமர்ப்பிப்பதன் காரணமாக பரிந்துரைகளை செயல்படுத்தாமல் இருப்பதற்கு எந்த சட்ட அடிப்படையும் இல்லை என்று மனித உரிமைகள் ஆணைக்கு தெரிவித்துள்ளது.

பரிந்துரைகள் செயல்படுத்தப்படாவிட்டால், அதற்கு எதிராக ஆணைக்குழு எடுக்கும் அடுத்த நடவடிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரி அல்லது நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமலையில் சட்டவிரோத கட்டடம்! பிறப்பிக்கப்பட்ட அதிரடியான உத்தரவு

திருமலையில் சட்டவிரோத கட்டடம்! பிறப்பிக்கப்பட்ட அதிரடியான உத்தரவு

நள்ளிரவு முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ள அரச ஊழியர்கள்

நள்ளிரவு முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ள அரச ஊழியர்கள்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW