பாலமுனை ஸஹ்வா அரபுக் கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டி
அம்பாரை, பாலமுனை ஸஹ்வா அரபுக் கல்லூரியின் 40 ஆண்டு கால வரலாற்றில் முதற் தடவையாக இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வு நேற்று (01) கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய அமைப்பாளருமான எம்.ஏ.அஷ்ரப் தாஹிர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றியீட்டிய இல்லங்களுக்கும், வீரர்களுக்கும் பரிசில்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.
இல்ல விளையாட்டு போட்டி
இதன்போது கல்லூரியின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவரான எச்.எல்.பஷீர் (ஷர்க்கி), பணிப்பாளர் சபையின் தலைவர் அஷ்ஷேய்ஹ் எம்.எச்.எம்.இத்ரீஸ் (ஸஹ்வி), கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் ஏ.ஆர்.றமீன் (மதனி) மற்றும் ஏனைய பணிப்பாளர் சபையின் உறுப்பினர்கள், கல்லூரி ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



