தேனும் பட்டைத்தூளும்
பேரறிஞர் ஷம்சுத்தீன் முஹம்மது இப்னு அபீபக்ர் இப்னு கய்யிம்(ரஹ்) அவர்களின் நபிவழி மருத்துவம் என்ற புத்தகத்தில் இருந்து கூறப்பட்டுள்ள தகவல்களாக இன்றைய தினம் தேனின் மருத்துவ குணங்களையும், அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் தெரிந்து கொள்வோம்.
* ஒரு ஸ்பூன் தேனில், ஒரு ஸ்பூன் பட்டைத்தூள் கலந்த வலி உள்ள இடத்தில் இடைவெளிவிட்டுத் தேய்த்து வர வலி நீங்கும்.
* 2 டீஸ்பூன் தேன், 2 ஸ்பூன் பட்டைத்தூள், 16 அவுன்ஸ் தேனீர் கலந்து குடிக்க வேண்டும், விரைவில் கொழுப்பு குறையும்.

* ஒரு ஸ்பூன் தேனில், கால் ஸ்பூன் பட்டைத்தூள் இளஞ்சூடான நீரில் அருந்தினால் ஜலதோஷம் நீங்கும்.
* சீனா, ஜப்பான், மத்திய கிழக்கு பகுதிகளில் கர்ப்பைப்பையை பலப்படுத்தவும், குழந்தை உண்டாகவும் பட்டைத்தூளை பல விதத்தில் பயன்படுத்தி வருகிறார்கள். சிறிது பட்டைத்தூள் சிறிது தேன் கலந்து கடினமான பசை போல ஆக்கி பற்களின் ஈறில் வைத்து சிறிது சிறிதாக எச்சில் கலந்து விழுங்க மலட்டுத்தன்மை நீங்கும்.
* பட்டைத்தூளையும், தேனையும் நீரில் கலந்து அருந்த வயிற்றுக்கோளாறு நீங்கும்.
* தேனையும், படைத்தூளையும் கலந்து பசையாக்கி ஈறில் வைத்து சிறிது சிறிதாக விழுங்க இருதய நோய் வராது.
* பட்டைத்தூளுடன், தேன் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
* ஒரு ஸ்பூன் பட்டைத்தூள், 2 ஸ்பூன் தேன் ஆகாதரத்திற்கு முன்பு அருந்தினால் செரிமான கோளாறு ஏற்படாது.
* 4 ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் பட்டைத்தூள், 3 கப் நீரில் தேநீரை போல் காய்ச்சி ஒரு நாளைக்கு 4 முறை அருந்த தோல் சுருக்கம் விழாமல் வயதான தோற்றம் ஏற்படுவதை தடுத்து ஆயுளைக்கூட்டும்.
* சொறி, சிரங்கு போன்ற எந்தவிதமான தோல் நோய்களும் தேனும், பட்டைத்தூளும் கலந்து தடவினால் நீங்கிவிடும்.
* தினமும் காலையில் வெறும் வயிற்றில் உணவிற்கு அரைமணி நேரம் முன்பு, இரவு படுக்கப்போகும் முன்பு தேனும், பட்டைத்தூளும் கொதிக்க வைக்கப்பட்ட நீர் அருந்தி வர எடை குறையும்.
* தேனும், பட்டைத்தூளும் கலந்து அருந்த புற்றுநோய் குணமாகும்.
