பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு
எதிர்வரும் பொது தேர்தலை முன்னிட்டு 13ஆம், 14ஆம் திகதிகளில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு விசேட விடுமுறை வழங்கவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றிலே இது குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மாணவர்களின் வாக்குரிமையை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரச விடுமுறைகள்
இதனை தொடர்ந்து, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக அரச பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதனடிப்படையில், அரசுப் பல்கலைக்கழகங்களின் கீழ் இல்லாத தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களும் வாக்களிக்க ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த 2006ஆம் ஆண்டு மே 31ஆம் திகதிக்கு முன்னர் பிறந்தவர்களில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |