காத்தான்குடியை கைப்பற்றப்போகும் முஸ்லிம் காங்கிரஸ்..!
நடைபெறும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் காத்தான்குடி, களுத்துறை மற்றும் புத்தளம் மாநகர சபைகளை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றும் என்று ஹிஸ்புல்லாஹ் எம்.பி. தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு காத்தான்குடியில் வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நம்பிக்கை வெளியீடு
தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர், கடந்த நாடாளுமன்றத் தேர்தலை விட இந்தத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கான வாக்கு வங்கி அதிகரித்துள்ளது.
காத்தான்குடி மாநகர சபைத் தேர்தலில் குறைந்தது பத்து வட்டாரங்களை நாங்கள் வென்றெடுப்போம். அதேபோன்று நாடளாவிய ரீதியில் களுத்துறை, புத்தளம் மாநகர சபைகளை நாங்கள் வென்றெடுப்போம்.
அதற்கும் மேலதிமாக வேறு சில இடங்களிலும் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறுவோம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |