மாவையின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த ஹிஸ்புல்லாஹ் எம்.பி
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், தமிழ் மக்களுக்காக தன் வாழ்நாட்களை போராட்டங்களோடு, சிறைவாசங்களோடும் கடந்து பெரும் பங்காற்றிய மாவை சேனாதிராசாவின் மறைவு மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியிருக்கிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்(Hizbullah) தெரிவித்துள்ளார்.
மறைந்த தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராசாவின் மறைவு தொடர்பில் வெளியிட்ட அனுதாப செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இரங்கல் செய்தி
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மறைந்த தலைவர் மாவை சேனாதிராசா என்னோடு நாடாளுமன்றத்தின் இருந்த ஒருவர். அவரை பற்றி நான் நன்றாக அறிந்தவன். அந்த சகையில், தமிழ் மக்கள் அரசியல் ரீதியாக பிரச்சினைகளை எதிர்நோக்குகின்ற பல்வேறு சந்தர்ப்பங்களின் தைரியமாக குரல்கொடுத்தவர் என்பதுடன் மிகவும் நீதியாகவும், நியாயமாகவும் நடந்துகொள்கின்றவர்.
அத்துடன், நீண்ட காலமாக தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்த இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராசாவின் மறைவு தமிழர் வரலாற்றில் நிரப்ப முடியாத வெற்றிடமாக இருக்கும் என்றும் அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |